மண், மதம் மனிதாபிமானம்
மரணம் என்று
ஆண்டாண்டு காலமாய்
கத்தி கதறியது எல்லாம்
உங்களுக்கு என்றும்
கேட்டதே இல்லை.
எமது வலிகள் ,
விழுமியங்கள்,
கட்டமைப்புகள்
நிராகரிக்கப்பட்டு
நிர்க்கதியான
போதெல்லாம்
நீங்கள் வசதியின் கடலில்
மூழ்கி இருந்தீர்கள்.
அடைவழிகளில், அலுவலகங்களில், பள்ளிகளில்,
விளைநிலங்களில்
விளையாட்டுத்திடல்களில்
நாங்கள் வடித்த உதிரங்கள்
அப்போதும் இப்போதும் உங்களைப் போலவே சிவப்பாகத்தான் இருந்தது காலப்போக்கில அது அமைதியின் போர்வையில்
அருகதை ஆனது..
ஆனால் இப்போது
ஓர் முள் உங்கள் பாதத்தை
கிழித்த போது,
நீங்கள் என் உதிரத்தை காண்பதாக சொல்கிறீர்கள் .
எப்போது உங்கள் வெள்ளை உதிரம் மானுடமானது?
எப்போது எமது கிறுக்கல்கள் தலைப்புகள்,வரலாறுகள்
எல்லாம் உங்கள் வரலாறகியது?
சிகரன்
23.05. 25
Reflecting up on false claims in South Africa
No comments:
Post a Comment