Wednesday, April 28, 2010

காதல்


கவிஞன் சொன்னான்
காதல் என்று - ஏனெனில்
ரசிக்க்த்தெரிந்தவன்!

கடவுள் சொன்னான்
அன்பு என்று- ஏனெனில்
ரட்சிக்கத்தெரிந்ததவன்!

நண்பன் சொன்னான்
ஆசை என்று- ஏனெனில்
மதிக்கத்தெரிந்தவன்!

மற்றவன் சொன்னான்
மோசம் என்று -ஏனெனில்
மதிப்பறியாதவன்!

தோற்றவன் சொன்னான்
கசக்கும் என்று -ஏனெனில்
அனுபவிக்க தெரியாதவன்!

வென்றவன் சொன்னான்
இனிக்கும் என்று -ஏனெனில்
அனுபவித்தவன் !

கண்டவன் சொன்னான்
காமம் என்று- ஏனெனில்
காத்திருந்தவன்

நீங்கள் சொல்கிறீர்கள்
'இல்லை இல்லை - அது
அவஸ்தை என்று' -ஏனெனில்
காதலிக்க தெரியாதவர்கள்!!
 
சிகரன் 

30 April 2008 

விடை கொடுக்கும்பொழுது


விடை கொடுக்கும்பொழுது
உன் முகத்தில் நிழல்கள் விழுவதில்லை
இன்னும் நம்பிக்கைக்கு
இடமுண்டாவென திரும்பிப் பார்க்கவே செய்கிறேன்!

விடை கொடுக்கும்பொழுது - உன் கண்கள்
எதையும் வெளிப்படுத்துவதில்லை
தூசிக்காவது இமைகள் மூடாதாவென
யாசிக்கவே செய்கிறேன் !

விடை கொடுக்கும்பொழுது - உன் கைகள்
உறுதியிழப்பதே இல்லை
உளைவெடுக்கவாவது நீளாதாவென்று
எதிர்பார்க்கவே செய்கிறேன்

இந்தமுறையும்
சரியாக சொல்லிக்கொள்ளவில்லையே என
வழியெல்லாம் நினைத்துக்கொண்டே
போகிறேன் .....
சிகரன் 
2005 
posted
26 June 2008 

Sunday, April 25, 2010

From a friend

My Dearest Friend,
If you ask me "What does friendship mean?"
I can never answer.
But deep in my heart I know...
When we hold hands
and walk to gather,
when we start our 
aimless and endless talks 
and never stop..


When we feel sad for each other 
the moment something goes wrong,
when we cant say without seeing each other
 a single day,
when we cant sleep at nights,
without sharing our secrets .. 
Sri, 
those are the times I feel there is something very special between us 
and I guess
that special thing is what called  "FRIENDSHIP"


You mean it!


From loving.. 
.......
26th March 2005 

மனதுக்கு மாறாக மாற்று வினாவுக்காக !

மனதுக்கு மாறாக
மாற்று வினாவுக்காக !

மன்னிக்கவும்
வினா மட்டும் தான் மாறாக 
மனது மட்டும் அப்படியே 
மாறாது 
உனக்காக 
உன் 
அன்புக்காக. 
சிகரன்
2000 த்தில் ஒரு நாள் . 

Saturday, April 24, 2010

உடைத்தவனும் உடைந்தவளும்

உருவேற்றியுள்ள க(வி)தை - இது ஒரு
உடைந்தவளின் உண்மைக்கதை!

உடைந்தவளும் உடைத்தவனும்
உரிமையாகவே தம்முள்
உள்ளம் தொலைத்தனர்.

உடைத்தவனும் மடையனானான்
உடைந்தவளும் மடைச்சியானாள்

உலகமே இதுதானென்று
ஊரறிய வலம் வந்தனர்!
உளமார காதலித்தனர்!

உடைந்தவள் வீட்டில் தடையில்லை
உரமாக இருந்தது அவளுணர்வு அங்கு

உற்றார் உடனிருந்தும்
உண்மையெதுவும் தெரிந்திருக்கவில்லை
உடைத்தவன் வீட்டில்

உளமே என்றனர்
உயிரே என்றனர்

உடைந்தவளும் உடைத்தவனும்
உயிரை பருகிக்கொண்டனர்?
உறவை வளர்த்துக்கொண்டனர்?

உலகம் உருண்டது
உளைச்சல் தொடங்கியது!

உன் மகன் ஓடி விட்டான் என்று
ஊர் பழி சொல்லுமென்று
உந்த காதலெல்லாம் செல்லாதென்று

உறுதியாக கூறினர்
உபதேசம் செய்தனர்

உடைத்தவன் வீட்டில் (2) -என்
உயிரற்ற உடல் தாண்டி
உன்னுயிரை ஏற்றுக்கொள் என்றனர்.

உடைத்தவன் மாறினான்
உறவை மாற்றினான்

உண்மையில் அவள் என் நண்பி என்றான்
உரிமைக்காதல் எப்போவோ
உடைந்து விட்டது என்றான்

உவள் என் வாழ்க்கைக்கு
உரியவளில்லை என்றான்

உவமானம் நிறையச் சொன்னான்
உத்தரவுகள் நிறையப் போட்டான்

உனக்கும் எனக்கும் இனி
உறவில்லையென்று
உறுதியாகச் சொன்னான்

உடைந்து போனாள் அவள்!
உதிரம் உறைந்தது அவளுக்கு!

உள்ளம் கொண்ட காதல் பரிசுகள்
ஊமையாகிவிட்ட காதல் சுவடுகள்
உதடுகள் கண்ட காதல் முத்தங்கள்

உலுப்பியெடுத்தன
உயிரைக் கரைத்தன

உலகமே இருண்டது
உயிர் விடத்துணிந்தது உடைந்தவள் உள்ளம்
உருக்குலைந்தது

உருக்கொண்டெழுந்தனர்
உடைந்தவள் வீட்டில்

உரக்க கத்தினர் - உடைத்தவன்
உயிரெடுப்பேனென
உறுமினர் உலகிற்கு!

உனக்காக எல்லாம் செய்வேன்
உனக்காக உயிரை விடுவேன் என்றவன் -இப்போ

ஊர்காவற் படையிடம் முறையிட்டான்
உடைத்தவன் குடும்ப மானம் காக்க
உடைந்தவள் குடும்ப மானம்

உயரப்பறந்தது ஊரில்
உடைந்தவள் அவள் பேரில்!

உள்ளாடை மாற்றக் கூட அவளுக்கின்று
உதவிகள் தேவை- இந்த
உலகில் அவள் பெயர் பைத்தியம்.

நன்றியுடன்

சிகரன்
30 March 2008

குறிப்பு : கவிதை யென்பதால் கடைசி வரி இன்று வரை பொய்

காதலில் தோல்வியென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது!

உன் இதயத்தில் என்செங்குருதி !


புன்னகைக்க முனைந்தேன்
புரியவில்லை என்றாய்

மயோகார்டியமும் தாண்டினேன்
மயங்க மாட்டேன் என்றாய்

அறைகள் நான்கு தான்
இடத்தையும் வலத்தையும் பிரித்தே வைத்தாய்

விளையாட முனைந்தேன்
பப்பிலரி முனைகளால் அடித்தே கலைத்தாய்

குருதியாய் வந்தேன்
ஆட்டேரி தான் வழி என்றாய்

சுருக்கினாய் விரித்தாய்
என்னையே பிரித்தாய்


நீ அழியாதிருக்கத்தான்
உன்னுள் நுழைகிறேன்
என்னை கலைப்பதில்
உனக்கென்ன ஆர்வம்

பரபரப்பாய் குடி புகுந்தேன்
பாதியிலே திரும்பி வந்தேன்

பன்னீராறு தடவைகள்
பரிதவித்து போகிறேன்
பத்திரமாய் உன்னை
பாதுகாப்பதற்காக!

காத்திரு ! மீண்டும் நான் வருவேன் !

உன் லப் டப் சந்ந்தங்களை
நித்தம் சிந்திக்கும்
செங்குருதி!
19 October 2008
சிகரன் 

தடம் புரளும் உறவுகள்

முன்னெப்போதும் சென்றிராத பாதையில்
நானும் நீயும் வருவதென்பது
தற்செயலாக நிகழ்கிறது!
வாழ்வின் பேரில் தீராத வெறுப்போ
சகஜ பேச்சுக்களில் அபிப்பிராய பேதங்களோ
நிஜ அழகையே அருவருக்கும்
அர்த்தமற்ற நினைப்புக்களோ
என்றைக்கேனும் நம்மிடத்தில்
இருந்திருக்குமா?

பின்னய காலங்களில்
அது ஏன் அப்படியாயிற்று?
நமது மொழி நமது போதாமைகளுக்குள்
எப்படி சுருங்கிப்போயிற்று?
நாமே நமக்கு விதித்த வரைமுறைகளுக்குள்
நம் உணர்வுகள் ஏன் விம்மி வெடித்தன?
மீறிவிடத் துடித்தன?
தற்செயலாக நாம் பொறுக்கிய பரிதாப வார்த்தைகள்
தவறிச் சிதறிய பளிங்காக மாறி
பல்வேறு திசைகளில் ஏன் அர்த்தம் கற்பித்தன?

நட்பை வேண்டியது நீயா? நானா?
நீ நாடினால் அது தேவை - அதுவே
நானாகிவிட்டால் நடிப்பு!
காதலிக்கத் தூண்டியது நீயா? நானா?
நீ பேசினால் ஜதார்த்தம் - அதுவே
நான் பேசினால் தப்பு!
நீ எனக்கு இன்னாரென்றும்
நான் உனக்கு இன்னாரென்றும்
நாம் தானே வகுத்துக்கொணடோம்!
அதற்குள் எதற்கு
அப்பா அம்மா தங்கச்சியெல்லாம்?
சாதி சனம் சந்ததியெல்லாம?
சீதணம் சொத்தெல்லாம்?

உன் முடிவுகள் எத்தனை தடவைகள் தான்
மாற்றியமைக்கப்பட்டன?
அழித்துத் திருத்தியே - நம்
உறவின் வரைவிலக்கணம் நம்மைக்
கிழித்துவிட்டதை நீ அறியாயா?


நாமிருவர் நட்பு பெற்றோம்
காதலித்து கூத்தடித்தோம்
கணவன் மனைவியாகி குழந்தையும் பெற்றோம்
வஞ்சமிலாப் பிஞ்சின் மழலை மொழியினிலே
எங்களை நாம் மறந்தோம்!
இதயத்து தழுவல்களால் நம்மை
இதமாக வைத்துக் கொண்டோம்!
நீடூழி வாழ்ந்தோமென
நாமும் நம் வரலாற்றை
பதித்துக்கொள்ள வேண்டாமா?

காலம் மீளாது மகனே(ளே)
காலன் வரும் நேரத்தை அவன்
தள்ளிப்போட மாட்டான்!
எனக்கு நீ! உனக்கு நான்!
நமக்கு நாம் - என
உணர மறுக்கும் விதிமுறைகளை
உடைத்தெறிந்து விடு!


காத்திருப்பென்பது விதியாகி
விட்டதனால் அந்த மதியின்
தண்மையினை "நம்" வீட்டு முற்றத்தில்
"நாமாக" அனுபவிக்கும் வரை…............

நான்





சிகரன்

(சில வரிச்சாயல்கள் 
நினைவில் நின்றவை
ஏன்
திருடப்பட்டவை)
30 June 2008 at 09:55 

சந்தர்ப்பங்கள்

சந்தர்ப்பங்கள்
அது எப்போதும் மானசீகமாகவே இருந்தது
உனக்கு தெரிந்த பல எனக்கு தெரியாது
எனக்கு தெரிந்த பல உனக்கு தெரியாது
பார்த்தது பேசியது பழகியது
அனைத்தும் வினாடியிலும் சொற்பம்
அறியாப்பருவம் அரைகுறையாகவே
அந்தரங்கங்களை அறிந்து கொண்டது
மனசுக்கும் வயசுக்கும் நடந்த
போராட்டங்களுக்குள்
பழக வேண்டிய சந்தர்ப்பங்கள்
சிதறடிக்கப் பட்டன
பரமன் ஏற்ப்படுத்திய சந்தர்ப்பங்களால் 

பிடிக்க வேண்டிய கரங்கள் பிரித்தெழுதப்பட்டன
உதவிய கரங்கள் உணரப்பட்டன
இன்று நானும் நீயும்
இன்னொரு சந்தர்ப்பத்தில்

ஒன்றாக
பிறிதொரு சந்தர்ப்பத்திற்காக
சிகரன் 
13 April 2010

பார்க்கும் முதல் நாளுக்காய் காக்கும் ஏக்கம்

நிலவு கால குளிரும் இல்லை.
குளிர் கால நிலவும் இல்லை.
சிந்திக்க வில்லை - அது
சந்திப்பு என்று.
இலத்திரனியல் கண்ணாடி
அவர்களின் சந்திப்பு மேடை.
மூஞ்சிப் புத்தகம்
அவர்களின் உறவுப் பாலம்.
அவளின் பகல் அவனின் இரவு.
அன்புக்கு கிடைத்தது அறிமுகம்
அளவுக்கு மீறியது வார்த்தைகள்.
அழகு, அறிவு
பொருள் இடம்
வெட்கம் நாணம்
எதுவும் இங்கே தடையில்லை.
பருவங்கள் இங்கேயும் பகிரப்பட்டன
இதயங்கள் இங்கேயும் திருடப்பட்டன.
திருடிய இதயங்கள் திரும்ப வருமா?
இது உங்கள் சொற்களின் இன்னொரு வடிவம்
பார்க்கும் முதல் நாளுக்காய் காக்கும் ஏக்கம்.

20 Feb, 2010
சிகரன் 

Hi everyone