Tuesday, May 19, 2026

Perspective

Some claim a triumph, high and proud,

While others weep beneath the shroud.

But truth remains in ash and stone:

A thousand innocents, overthrown,

Cut down before they reached their prime,

For the simple crime of birth and time.


​Some hail the dawn of history changed,

While others see their worlds estranged—

Their heritage dumped in the dust.

But truth looks on in deep disgust:

No justice served or won,

It is the day humanity was undone.


​Some swear this dark path is the best,

While others curse it, deeply stressed.

But truth reveals the bitter cost:

The soul of culture has been lost.


​Some call them idiots who sparked the flame,

And place on them the weight of blame.

While others praise them, gods of might,

Who guided actions toward the light.

Yet in the shadows of their pride,

The simple truth cannot hide:

The cost was paid in blood and tears,

To echo down the future years.

Sikaran


சிலர் பெருமையோடு வெற்றி என்கினம்,

சிலரோ சாம்பலில் விழுந்து விழுந்து அழுகினம்.

ஆனால் உண்மை, அந்தச் சிதைவுகளில் மிஞ்சியிருக்குது: 

அவர்கள் அவர்களுக்கு பிறந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் அழிக்கப்பட்டது. 


சிலர் இது வரலாற்றை மாற்றிய நாள் என்கினம்,

சிலரோ தங்கள் வரலாறு சிதைந்துபோன நாள் என்கினம்.

ஆனால் உண்மை என்னவென்றால்,

மனிதநேயம் இன்று தன் வரலாற்றையே இழந்திருந்து.


சிலர் இது நன்மைக்கே என்கினம்,

சிலரோ இது மிக மோசமானது என்கினம்.

ஆனால் உண்மை, இது நமது பண்பாட்டின்

ஆன்மாவை பறித்துச் சென்றது.


சிலர் இவர்களை நெருப்பைப் பற்றவைத்த முட்டாள்கள் எனப் பழிக்கினம்,

சிலரோ அவர்களைக் கடவுளராகக் கருதிப் போற்றுகினம்.

ஆனால் அவர்களின் ஆணவத்தின் நிழலில்,

மறைக்க முடியாத உண்மை ஒன்றுதான்:

இதற்கான விலை, வரவிருக்கும் வெற்று ஆண்டுகளில்

இரத்தத்தாலும் கண்ணீராலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.


18.05.26 
சிகரன் 

Friday, May 15, 2026

மிதிவண்டி

 ​

​இதமான மாலைப் பொழுது,

புழுதி படிந்த பாதையின் நடுவே

வரிசையாய் நின்ற என்தோழிகள், 

உன்னை தேடிக்களைத்திருந்த 

என் கண்கள் தூரத்தெரிந்த 

உன்னை கண்டதும் 

அகல விரித்துக் கொண்டன.  


நீல நிற சேட்டு 

வெள்ளை நிற வேட்டி அணிந்த 

உன் கண்கள் 

அந்த மங்கலான மாலைப்பொழுதிலும் 

பட்டுத்தாவணிகளை 

தேடிக்கொண்டிருந்தன. 


​மீசை முளைக்காத வயது,

மாசறியா வெள்ளை உள்ளம்,

நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பயம்...

இருந்தும், உன் விழிகளில் வழிந்தது

வார்த்தைகளில்லாப் பெருங்கருணை.


​காரிருள் சூழ்ந்து வர,

பதறியது உன் கள்ளமில்லா மனம்.

"நேரமாகிவிட்டது,

பத்திரமாய் வீட்டிற்குப் போக வேணும்..."

நீ சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!

​அதிகாரமும் இல்லை,

அளவுக்கு மீறிய உரிமையும் இல்லை,

அன்பு கலந்த அந்த அக்கறை...


அதிர்ஷ்டம் தேடி நாம் சென்ற 

கோவில் வாசலும்,

அறிவைத் தேடி நாம் நின்ற 

டியூஷன் சென்டர் நிழலும்,

நம் நினைவுகளை 

இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றன.



​காலங்கள் மாறி நாம் பிரிந்தாலும்,

அன்று என்னை மிதித்துச் சென்ற 

உன் பாதங்களின் ஸ்பரிசமும்,

என் கைப் பிடியில் 

நீ காட்டிய அந்தப் பத்திரமான பாசமும்...

இன்றும் என் இரும்பு நெஞ்சில்

 துருப்பிடிக்காமல் வாழ்கிறது!


இப்படிக்கு 


மிதிவண்டி 


சிகரன்

16 05 26 




Tuesday, May 12, 2026

முதிர்ச்சி

 கால  நீரோட்டத்தில்

வெவ்வேறு பாதைகளில்

நீந்திக் கரை புரண்டு

ஒதுங்கிக்கொண்ட போது

நீ என்னில் கண்டது

முதிர்ச்சி

வயதில் மட்டுமல்ல.


சிகரன் 

08 05 26 

Monday, May 11, 2026

Relationship

 

We will never forget the day it began,

A casual spark, an unplanned plan.

We started with messages, screen to screen,

Unaware of the wonders that lay between


​We often spoke of a different age,

Day and night but at the same page

About the time we never had a screen,

Where voices were heard and faces seen.


We also spoke about the people 

Who swap the flowers like a beetle 

About time they live together 

Where the rules are against each other 


We appreciate the bridge it built,

The way it bloom without a wilt,

Yet we disagreed on its cold design,

Preferring the ego in all it's devine.

We brought the reality, honest and bright,

Turning the shadows to morning light.


A fortress of spiritual love , a deep security,

Guarding our hearts with absolute purity.


​It wasn't for logic, for status, or gold,

But a story of kindness that dared to unfold.

An entire world fashioned so tenderly,

Based on the love, and the love only.


With love 

சிகரன் 

 May 2026

கட்டுப்பாடு

என் உணர்வுகளினதும்

உன் உணர்வுகளினதும்

பாதுகாப்பிற்காக 

நாம் செய்து கொண்ட

அன்பு ஒப்பந்தம் 

கட்டுப்பாடு 


சிகரன் 


10 05 26


Saturday, May 9, 2026

மாற்றம்


என் சகலகலா வல்லவனுக்கு...

​சீருடை அணிந்த சிறுவனாய் உன்னைப் பார்த்தேன்,
சிதறிய புன்னகை மட்டும் தான் அன்று தெரியும்!
உன் தோள் சுமந்த சிறு பையும்,
காற்றுடன் போட்டியிடும் பச்சை நிற பைக்கும்,
மென்மையான உன் குணமும், கள்ளம் கபடமற்ற சுபாவமும்
இன்றும் என் மனத்திரையில் நிழலாடுவதுண்டு.
​அன்று...
ஆலயம் சென்ற வேளையில், யாருக்கும் தெரியாமல்
உன்னை ரகசியமாய்ப் பார்த்த அந்த நொடிகள் - தெய்வத்திடம் வேண்டியதை விட, உன்னையே அதிகம் சேகரித்துக் கொண்டது என் கண்கள்!
கூட்ட நெரிசலில் உன்னைத் தொலைக்காமல் பார்த்த அந்தப் பார்வை,
இன்றும் என் காதலின் ஆதிப்புள்ளி.
​இன்று...
நாளுக்கு நாள் நீ தரும் ஆச்சரியங்களுடன்,
பல கலைகள் கற்று நீ அடைந்திருக்கும் விஸ்வரூபம் கண்டு வியக்கிறேன்!
காலங்கள் மாறினாலும், என் நட்பு மாறாது...
என்றும் என் வியப்பும் நீயே! என் விருப்பமும் நீயே!
​என் சகலகலா வல்லவனே!

என் இளமைக்கால நினைவுகளை 

மீட்டுக்கொண்ட போது 

எனக்கு நானே 

சிகரன் 

நன்றி. நினைவுகளை தந்த நட்புக்கு 

08 05 26

Friday, May 8, 2026

உணர்வு II

வெளிப்படுத்துகையில்,

உனதும் எனதும் 

வெவ்வேறாயினும் 

நமது உணர்வு 

ஒன்று தான்



சிகரன் 

020526

இரண்டாம் சந்தர்ப்பம்

 இதுவரை அவர்கள்

கண்டிராத ஓர் 

புதிய பாதைக்கான 

வரைபடம்.

பாதைகள் மாறலாம் 

விதி என்றும் மாறாது. 

அடைய வேண்டுமா

இல்லையா என்பது

அவர்களின்

முடிவு


அவர்களுக்காக

சிகரன் 

22 04 26

தகுதி

அவர்கள் எங்கே விழுந்தார்கள் என்பது முக்கியமல்ல,

நிழல்கள் எவ்வளவு நீளமாகப் படர்ந்தன என்பதும் பொருட்டல்ல;

ஒவ்வொரு ஆன்மாவும் தம்

மனதுக்கு பிடித்த புதிய பாடலைப் பாட,

இன்னொரு வாய்ப்பிற்கு தகுதியுடையவர்களே.


 சிகரன்

28 04 26

Monday, May 4, 2026

ஹைகூ கவிதைகள்



பட்ட மரங்கூட

சிரித்துக் கொண்டது

கவிதைப் பூக்கள் 

மலரக்கண்டு. 

Translation ;

Even dying tree 

Smiled when 

the poems 

bloomed. 

...................................................... 


 நீ 

புத்தகமாய் 

இருப்பதனால்

என்னவோ

எனக்கும்

கவிதை எழுத

தோன்றுகிறது..


Tranilation

I could write my scribbles 

as a poem because 

You are a book. 

............................................................. 

எனது 

நூலகத்தின்

அனைத்து

புத்தகங்களிலிருந்த 

கவிதைகளின்

தொகுப்பு 

உனது

அரட்டைகள். 

The chat we had

 is the combination 

of all the poem I had 

in my library 

............................................................... 

நாலுமணி நேர 

தூக்கத்தை 

அவசர அவசரமாக 

மூன்றரை மணி நேரத்தில் 

முடித்துக் கொண்டு 

எழந்திருக்கிறேன் 

உன் மீதிக் 

கவிதைக்காக. 


 I finished my four hour sleep 

in three and half hour 

to  catch up with your 

Rest of the poem. 

............................................................................... 

அவ்வப்போது 

கிறுக்கிக்கொள்ளும்

வரிகள் எல்லாம் 

கவிதைகள் ஆகின 

அவை

உன் காதில் 

விழுந்த பின்னர்


My scribles  become poem 

When you listen to those. 

........................................................................... 

ஒரு சில  

இதயங்களின் 

வெளிப்பாடு 

மறு சிலருக்கு 

வியப்பு -

கவிதை


A poem is an expression of their hearts 

But for some it is a surprise. 

.......................................................................... 


ரகசியம் - அன்று 

எனக்கு மட்டுமே 

தெரிந்த கதை

இன்று 

உனது மொழியில்

கவிதையாக. 


The story that only known to me  is there for you in the form of poem, for you 


சிகரன் 

வசந்த கால 

கிறுக்கல்கள். 


05 05 26