என் சகலகலா வல்லவனுக்கு...
சீருடை அணிந்த சிறுவனாய் உன்னைப் பார்த்தேன்,
சிதறிய புன்னகை மட்டும் தான் அன்று தெரியும்!
உன் தோள் சுமந்த சிறு பையும்,
காற்றுடன் போட்டியிடும் பச்சை நிற பைக்கும்,
மென்மையான உன் குணமும், கள்ளம் கபடமற்ற சுபாவமும்
இன்றும் என் மனத்திரையில் நிழலாடுவதுண்டு.
அன்று...
ஆலயம் சென்ற வேளையில், யாருக்கும் தெரியாமல்
உன்னை ரகசியமாய்ப் பார்த்த அந்த நொடிகள் - தெய்வத்திடம் வேண்டியதை விட, உன்னையே அதிகம் சேகரித்துக் கொண்டது என் கண்கள்!
கூட்ட நெரிசலில் உன்னைத் தொலைக்காமல் பார்த்த அந்தப் பார்வை,
இன்றும் என் காதலின் ஆதிப்புள்ளி.
இன்று...
நாளுக்கு நாள் நீ தரும் ஆச்சரியங்களுடன்,
பல கலைகள் கற்று நீ அடைந்திருக்கும் விஸ்வரூபம் கண்டு வியக்கிறேன்!
காலங்கள் மாறினாலும், என் நட்பு மாறாது...
என்றும் என் வியப்பும் நீயே! என் விருப்பமும் நீயே!
என் சகலகலா வல்லவனே!
என் இளமைக்கால நினைவுகளை
மீட்டுக்கொண்ட போது
எனக்கு நானே
சிகரன்
நன்றி. நினைவுகளை தந்த நட்புக்கு
08 05 26
_edit_277819642156044.jpg)
No comments:
Post a Comment