Saturday, April 24, 2010

சந்தர்ப்பங்கள்

சந்தர்ப்பங்கள்
அது எப்போதும் மானசீகமாகவே இருந்தது
உனக்கு தெரிந்த பல எனக்கு தெரியாது
எனக்கு தெரிந்த பல உனக்கு தெரியாது
பார்த்தது பேசியது பழகியது
அனைத்தும் வினாடியிலும் சொற்பம்
அறியாப்பருவம் அரைகுறையாகவே
அந்தரங்கங்களை அறிந்து கொண்டது
மனசுக்கும் வயசுக்கும் நடந்த
போராட்டங்களுக்குள்
பழக வேண்டிய சந்தர்ப்பங்கள்
சிதறடிக்கப் பட்டன
பரமன் ஏற்ப்படுத்திய சந்தர்ப்பங்களால் 

பிடிக்க வேண்டிய கரங்கள் பிரித்தெழுதப்பட்டன
உதவிய கரங்கள் உணரப்பட்டன
இன்று நானும் நீயும்
இன்னொரு சந்தர்ப்பத்தில்

ஒன்றாக
பிறிதொரு சந்தர்ப்பத்திற்காக
சிகரன் 
13 April 2010

1 comment:

  1. இந்த கவிதை ரொம்ப feel பண்ணி எழுதி இருக்கிறீங்க சிகரன் அண்ணா.

    ReplyDelete