Saturday, March 12, 2011

சோதிட கிழவி II

இன்று அது கனவல்ல - அவள்
எனதில்லத்திலிருந்தே
எனதுள்ளம் சொல்ல வந்தாள்

பிரமனின் விதிப் புத்தகம்
தானே எழுதியது போல
சிரமதில் கை கூப்பி

காளியை அருகழைத்து - பன்னிரு
சோழியை விட்டு எறிந்தாள்
சிவத்த வாய் கூன் கிழவி

கட்டுகடங்கா வார்த்தைகள்
மெட்டுப் போட்டு
கொட்டிச் சிதறின

பள்ளியேறி பாடம் படிக்காதவள்
தெள்ளத் தெளிவாக
விளக்கமும் கூறினாள்

அரசனின் உதவியால்
பூலோக மாள்வாய் நீ
மனம் தளராதே !

சித்திர சிறு சிறுக்கி
சீமையில் இருக்கிறாள்
சின்னவன் கையை சுருக்காக  பிடிப்பாள்

சிறிதான உன் வாழ்வு
பெரிதாகி போகும் உன்
பொறுமை கை கொடுக்கும்

புத்திரன் உன் மூத்தவனையும்
புத்திரி அவள் இளையவளையும் உன்னை
புரிந்தவள் பெற்றெடுப்பாள்.

மன்னவன் நீயாக மகாராணியாய் அவளிருப்பாள் 
முனைவனாய் நீயிருந்து  முப்பது பேர் ஆள்வாய் 
மந்திரகிழவி மனதோடு கூறினாள்

மதத்தை நம்பாதவன்  மனது 
மரம் தாவ  தொடங்கியது 
மரணித்த நினைவுகளை மீட்ட  தொடங்கியது  

மொட்டையாகவே இருந்த வழுக்கை தலையையும் 
கட்டை முழங்காலையும்  இழுத்து 
முடிந்து கொண்டது . 

இருந்து தான் பார்ப்போமே  !

30 noveember 2011













No comments:

Post a Comment