மூன்று நாள் இன்று
மூன்று பகல்
மூன்று இரவு
மூவாயிரம் கோடி கனவுகள்
முன்னூறாயிரம் திட்டங்கள்
முதன் முதல் அனுபவங்கள்
முதன் முதல் அறிமுகங்கள்
மூன்றெழுத்து மந்திரத்தின்
முகவரி மாற்றிக் கொண்டோம்
முதல் கணத்திலியே
முழுதும் அறிந்தோம்
முதல் முத்தத்தை
மூலதனம் இட்டோம்
முதிர் கனிச் செம்மை
முகத்தில் கண்டோம்
மூன்றெழுத்து
மந்திரம் மட்டுமல்ல - உன்
முதற் பெயரும் என்
மறு பெயரும்
மேலும் தொடருமென
சிகரன்
No comments:
Post a Comment