அறிமுகம்
அவன்: (மனிதத்தின் பாகம்)
மூன்றடுக்கு மாடிவீடு
முன்னுக்கு மூண்டு கார்
நுனிநாக்கில் இங்கிலீசு
தனியாக தங்குமிடம்
இரவு விடுதி களியாட்டம்
இல்லையெண்டால் Blind Dating
மூத்த சகோதரிக்கு
முந்தநாள் விவாகரத்து,
இளைய சகோதரிக்கு
எந்தநாளும் விவாகரத்து
இளைய சகோதரிக்கு
எந்தநாளும் விவாகரத்து
அவள் (மனிதத்தின் பாகம்)
மூண்டுவேளை ஒருசோறு
முதலுதவி எண்டாலும்
மூண்டு மைல் நடக்கவேணும்
மூண்டு மைல் நடக்கவேணும்
பாதி சம்பளம் மருந்தோட போயிடும்
மீதி மிச்சமெல்லாம் எண்டைக்கும் கண்டதில்லை
படிப்பில மட்டுமில்ல வேலையிலையும்
கெட்டிக்காரி . தானும் தன்ர வீடும் எண்டு
நல்லாத்தான் இருந்தவளாம்
விதி
வடிவம் ஏதும் இன்றி எதிலும் வந்து குந்தும்
மாயப் பிசாசு , இந்த சமன் பாடில்
இது அந்த குரூப் ஸ்டடி.
செயன் முறை
அந்த கோர்ஸ் படிச்சா தான்
நல்ல வேலை கிடைக்குமெண்டு அவளும்
எதாவது படிச்சாக வேணுமெண்டு அவனும்
ஒன்றாக ஒரே வகுப்பில் இளமை ததும்பும்
கல்லூரிச் குடுவையில் இடப்படுகின்றனர்.
ஆரம்ப தாக்கம் குறைவாக இருந்ததால்
விதி தந்த ஊக்கி சோதனை செய்யப்பட்டது
அவள் அவன் இருவரும் ஒரு குரூப்
அவள் அவன் இருவருக்கும் ஒரு அசைன்மென்ட்
அவனுக்கும் சேர்த்து அவளே படித்தாள்
அறிவின் மேற்பரப்பில் அன்பும் பகிர்ந்தது
அவர்களை தெரிந்தும் அவர்களே மறந்தனர்
அகவெப்ப தாக்கமாக காதல் மலர்ந்தது
உள்ளம் குளிர்ந்து ஆழம் உணர்ந்தது !
விளக்கம்
அவள் தலை முறையில் யாருமே
படி தாண்டியது இல்லை
அளவுக்கு மீறி எவரும்
குழி தோண்டியது இல்லை
வாழ்கை தேர் என்றுமே
குடம் சாய்ந்ததில்லை
பண்பாடு என்றுமே
மடம் போனதில்லை.
படிதாண்டல் குழி தோண்டல்
குடம் சாய்தல் மடம்போதல்
ஒன்றுமே புதிதல்ல அவனுக்கு என்றும்
உறவு வளர்ந்ததும் தாக்கம் முடிந்தது
தாக்கம் முடிந்ததும் யதார்த்தம் புரிந்தது
வாழ்க்கை வட்டங்கள் மேட் பொருந்தவே இல்லை
வாழ்ந்தாக வேண்டும் வருடம் முழுவதும்
வாழ்வின் வரைவிலக்கணத்தை
தனித்தனியாக எழுதிக்கொண்டனர்
இரு வேறு வாழ்க்கை வட்டங்கள்
இருவருக்கும் பொருந்திக் கொண்டன.
இதற்கும் விதி என பெயரிடப்பட்டது
முடிவு
அவள் அவன் இருவருக்கும் ஒரு அசைன்மென்ட்
அவனுக்கும் சேர்த்து அவளே படித்தாள்
அறிவின் மேற்பரப்பில் அன்பும் பகிர்ந்தது
அவர்களை தெரிந்தும் அவர்களே மறந்தனர்
அகவெப்ப தாக்கமாக காதல் மலர்ந்தது
உள்ளம் குளிர்ந்து ஆழம் உணர்ந்தது !
பதிவேதும் இன்றியே உறவும் வளந்தது
விளக்கம்
அவள் தலை முறையில் யாருமே
படி தாண்டியது இல்லை
அளவுக்கு மீறி எவரும்
குழி தோண்டியது இல்லை
வாழ்கை தேர் என்றுமே
குடம் சாய்ந்ததில்லை
பண்பாடு என்றுமே
மடம் போனதில்லை.
படிதாண்டல் குழி தோண்டல்
குடம் சாய்தல் மடம்போதல்
ஒன்றுமே புதிதல்ல அவனுக்கு என்றும்
உறவு வளர்ந்ததும் தாக்கம் முடிந்தது
தாக்கம் முடிந்ததும் யதார்த்தம் புரிந்தது
வாழ்க்கை வட்டங்கள் மேட் பொருந்தவே இல்லை
வாழ்ந்தாக வேண்டும் வருடம் முழுவதும்
வாழ்வின் வரைவிலக்கணத்தை
தனித்தனியாக எழுதிக்கொண்டனர்
இரு வேறு வாழ்க்கை வட்டங்கள்
இருவருக்கும் பொருந்திக் கொண்டன.
இதற்கும் விதி என பெயரிடப்பட்டது
முடிவு
மனிதம்கள் விதியினால் கலக்கப் பட்டு
வாழ்க்கை அமைக்கப்படுகிறது .
நிறுவல் II தொடரும் ...
சிகரன் (நட்பை படித்தபோது )
28 August 2010
வாழ்க்கை அமைக்கப்படுகிறது .
நிறுவல் II தொடரும் ...
சிகரன் (நட்பை படித்தபோது )
28 August 2010
nice poem.... :D
ReplyDelete