Sunday, June 14, 2026

I Wished You Were With Me

​வானத்தில் ஓர் வர்ணஜாலம்

​நொடிகள் தோறும் புன்னகை,

வண்ணத்திரை வழியே வார்த்தைகள்,

மேகக் கூட்டங்களுக்கு நடுவே  ஓர்

மின்னல் வேகச் சிற்றின்பம்!




​விளையாட்டின் போட்டியிலும் ஓர் அன்பு,

கைநீட்டி வழிகாட்டும் நல்ல பண்பு,

அடிக்கடி கூறிக்கொண்ட அனுதாப வார்த்தைகளில்,

பயணத்தின் களைப்பும் பறந்தோடிப் போனது. 


​போட்டியும் வழிகாட்டலும் பல நாள் பழக்கம் போல் நகர,

மனதில் ஒரு பழைய வசந்தம் மெல்ல விழித்தது. 

அன்று நாம் ஒன்றாகச் சென்ற இளமைக்கால பயணங்கள்,

மரியாதையும், எல்லையற்ற உரிமையும் கலந்த அந்தப் பொன்னான நொடிகள்!

​அந்த நிம்மதியும் நெருக்கமும் நெஞ்சில் நிழலாட,

என் மனதோ மெல்ல 

இளகிப் போனது. 


பக்கத்தில் இருக்கும் அவளின் இடத்தில், என்னை அறியாமலே என் வாய் முனுமுனுத்து கொண்டது

 I Wished You Were With Me!


Sikaran 

10 06 2026

No comments:

Post a Comment